உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிறைச்சாலைகளில் CCTV கமெரா பொருத்தும் திட்டம் கைவிடப்பட்டது.


வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் மற்றும் மகசின் சிறைசாலை வளாகங்களில் சி.சி.டி.வி கமெரா பொருத்தத் தீர்மானித்து, முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம், தற்போது கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறைச்சாலைகளுக்கு சி.சி.டி.வி கமெரா பொருத்துவதற்கு 30 மில்லியன் ரூபாய் செலவாகும் என்பதனால் குறித்த இவ்வேலைத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாரளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

எனினும், சி.சி.டி.வி கமெரா பொருத்துவதாகத் தீர்மானிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட மூன்று சிறைச்சாலைகளின் நுழைவாயில்களில் மாத்திரம், சி.சி.டி.வி கமெரா பொருத்துவதற்குத் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் இதனை இவ்வருட இறுதிக்குள் செய்து முடிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கொழும்பு கடற்கரையில் இறந்த நிலையில் ஆமைகள்..!

wpengine

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை..

wpengine

கோட்டாவின் இலங்கை குடியுரிமை – வழக்கு விசாரணை ஆரம்பம்

wpengine