உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சிறைக் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.

நேற்று வெசாக் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக 988 சிறைகைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறுகுற்றங்களை புரிந்த மற்றும் தண்டப்பணத்தினை செலுத்த முடியாத 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை நேற்று (05) மற்றும் இன்று (06) ஆகிய தினங்களில் சிறைக்கைதிகளை சந்திப்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலித்தீன் பாவனை தடைக்கு பிரதமரால் காலக்கெடு..

wpengine

இதுவரை 2,023 பேர் குணமடைந்தனர்

wpengine

சட்டத்தரணி சுகந்திகாவுக்கு சட்டத்தரணிகள் சங்கம் தடை – விசாரணைக்கு குழு நியமனம்…

wpengine