உள்நாட்டு செய்திகள்

சிறுவர்களை வர்த்தகத்தில் ஈடுபடுத்துபவர்களை கண்டறிய விசேட குழு…



நிதி திரட்டுவதை இலக்காகக் கொண்டு சிறுவர்களை வர்த்தகத்தில் ஈடுபடுத்தும் குழுக்கள் பற்றி கண்டறிவதற்காக விசேட குழுக்கள் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வேலைத்திட்டத்தினை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை முன்னெடுக்கின்றது.

சிறுவர்களை அவர்களின் பெற்றோரும், பாதுகாவலர்களும் தொழிலில் ஈடுபடுத்த முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சில இடங்களில் பிள்ளைகளுக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக அவர்களை அழைத்துச் சென்று நிதி திரட்டும் மோசடிகளும் இடம்பெறுகின்றன. இது பற்றி விசாரணைகளை நாடுமுழுவதும் செயற்படும் குழுக்கள் முன்னெடுக்கவுள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் பற்றி அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 1929 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

2800 குடும்பங்களுக்கு பழைய இருப்பிடங்களில் வசிக்கத் தடைவிதிப்பு

wpengine

இலங்கை மருத்துவ சபையின் கீழ் உள்ள செயற்பாடுகள் அரச ஆணைக்குழுவிற்கு…

wpengine

சதொச மீண்டும் சில பொருட்களின் விலையை குறைத்தது..!

wpengine