Top Story 3உள்நாட்டு செய்திகள்

சிறுவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் – பிரதமர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறுவர்களுக்கு முன்னுரிமையளித்து அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பது அனைத்து மனித வர்க்கத்தினரதும் கட்டாய கடமையாகும் என சர்வதேச சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன், விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு முன்னுரிமை அளித்து அதனைத் துரிதகதியில் நிறைவு செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனப் பிரதமர் மஹிந்தராஜபக்ஷ தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்காலத்தில் இடம்பெறுகின்ற சிறுவர் வன்முறை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் குழந்தைகளை அறிவுறுத்தும் செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளை நாடுபூராகவும் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதன் மூலம் சிறுவர் வன்கொடுமையினையும் சிறுவர் துஷ்பிரயோகத்தினையும் இயன்றளவு குறைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வற் வரி திருத்தம் குறித்த யோசனை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு.

wpengine

நாமலுக்கு எதிராக ஜனாதிபதி அலுவலகத்தினால் சீ.ஐ.டி இல் முறைப்பாடு…

wpengine

இன்னாள் ஜனாதிபதியிடமிருந்து சங்காவுக்கொரு கோரிக்கை

wpengine