ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சிறுவனை வாளால் வெட்டிய கும்பலைச் சேர்ந்த இருவர் கைது



தட்டாதெருச் சந்தி, ஐயனார் கோவிலடியிலுள்ள மரக்காலையில் பணிபுரியும் சிறுவனை வாளால் வெட்டி படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  டி.டி.பி.வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

தாக்குதல் மேற்கொண்ட கும்பல் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் இலக்கம், போக்குவரத்து திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், ஏனையோரும் கைது செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தட்டாதெருச் சந்தி, ஐயனார் கோவிலடியில் அமைந்துள்ள மரக்காலைக்குள் பொல்லுகள், கைக்கிளிப்புக்களுடன் நுழைந்த 15 பேர் கொண்ட கும்பலொன்று அதே பகுதியைச் சேர்ந்த கே.கேமராஜன் என்ற சிறுவனைக் கடுமையாகத் தாக்கியது.

இதன்போது படுகாயமடைந்த சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திமுத் இற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஒழுக்காற்று நடவடிக்கை..

wpengine

கரையொதுங்கும் கொரோனா சடலங்கள்

wpengine

பிணை முறி மோசடியின் பிரதான சூத்திரதாரி பிரதமரே… நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானம்..

wpengine