கேளிக்கை

சிறந்த மணமகள் போட்டியில் சமந்தா முன்னிலை…



சமந்தா, சோனம்கபூர், அனுஷ்கா சர்மா மற்றும் நேஹா துப்யா ஆகியோர் தங்கள் காதலர்களை மணந்து இல்லறத்தில் புகுந்தனர். திருமணத்துக்காக விசேட ஆடைகளை வடிவமைக்க டிசைனர்களிடம் பொறுப்பு ஒப்படைத்திருந்தனர்.

டிசைனர் தயாரித்தளித்த உடைகள் அணிந்து மணமகள் கோலத்துக்கு மாறினர். அவர்கள் மணக்கோலத்திற்காக அணிந்த ஆடைகளில் எது சிறந்தது என்று நெட்டிஸன்களுக்கு மும்பை நிறுவனம் ஒன்று போட்டி வைத்தது.

இந்து, கிறிஸ்துவம் என இரு மதமுறைப்படி திருமணம் செய்துகொண்டார் சமந்தா. இந்து மத முறைப்படியான திருமணத்தின்போது தங்க நிறத்தில் ஜரிகை வேய்ந்த பட்டு சேலை அணிந்து பாரம்பரிய தங்க நகைகள் அணிந்து ஜொலித்தார்.

சோனம் கபூர், அனுஷ்கா சர்மா, நேஹா துப்யா மூவரும் லெஹன்கா உடைகள் அணிந்திருந்தனர்.

ஜொலிக்கும் தங்க நகைகளுடன் சிவப்பு நிற லெஹன்காவை சோனம், பிங்க் நிறத்தில் பூ போட்ட லெஹன்காவை அனுஷ்கா அணிந்திருந்தனர்.

போட்டியில் அதிக வாக்கு சமந்தாவுக்கே கிடைத்திருந்தது. அடுத்த இடத்தை அனுஷ்கா சர்மா பெற்றார்.

சமந்தா, சோனம்கபூர், அனுஷ்கா சர்மா ஆகிய 3 நடிகைகளுக்கும் ஒற்றுமை என்னவென்றால் மூவருமே திருமணத்துக்கு பிறகு நடிக்க வந்திருக்கின்றனர்.

Related posts

மற்றுமொரு அரைநிர்வாண படங்களுடன் இராஜின் புதிய காணொளி.. [VIDEO]

wpengine

சந்திமால் மற்றும் விஷ்வ அரசியலில்…

wpengine

நடிகர் தவசி காலமானார்.

wpengine