உள்நாட்டு செய்திகள்

சிரேஷ்ட மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு…


அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களையும் இன்று(26) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார்.

இதன்போது, நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை முறையாக முன்கொண்டு செல்வது தொடர்பில்  கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்த சந்திப்பு இன்று(26) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்துப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது

Related posts

குறைந்த வட்டியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடனுதவி

wpengine

கோட்டா கோ கம பிரான்ஸ் செயற்பாட்டாளர் இலங்கை வந்த போது கைது

wpengine

இதுவரை 49,837 பேர் கைது

wpengine