உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சிம்பாவ்வே அணியிடம் முதல் போட்டியிலேயே தோற்றது இலங்கை அணி…



சுற்றுலா சிம்பாவ்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இன்றைய(30) சர்வதேச ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணி 6 விக்கட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

காலியில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட் இழப்பிற்கு 316 ஓட்டங்களை பெற்றது.

இந்த போட்டி காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இன்றைய போட்டியில் இலங்கை அணிக்கு ஏஞ்சலோ மேத்தியூஸ் தலைமை வகித்தார்.

துடுப்பாட்டத்தில் குசல் மென்டிஸ் 86 ஓட்டங்களையும், உப்புல் தரங்க 79 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் டென்டய் சட்டாரா 49 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும், சொலமன் மயர் 47 ஓட்டங்களை கொடுத்து 1 விக்கட்டையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் சிம்பாப்வே அணிக்கு 317 என்ற ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த அணி 47.4 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 322 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் சொலமன் மயர் 96 பந்துகளை எதிர்கொண்டு 112 ஓட்டங்களை பெற்றார்.

ஸேன் வில்லியம்ஸ் 65 ஓட்டங்களையும், சிகெந்தர் ரஸா 67 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

(rizmira)

Related posts

வசந்த UNP இலிருந்து நீங்கினார் – அரசியல் தீர்வு இன்று

wpengine

நாட்டை முழுமையாக முடக்கவே மாட்டேன்

wpengine

T20 WORLD CUP : கிண்ணத்தினை ஆஸி கைப்பற்றியது

wpengine