உலக செய்திகள்

சிம்பாப்வே அதிபர் முகாபே பதவி விலக மறுப்பு…



சிம்பாப்வேயின் நீண்ட கால அதிபரான ராபர்ட் முகாபே தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி இருந்தும், அவர் உடனடியாக பதவி விலக தொடர்ந்து மறுத்து வருகிறார்.

ஆப்பிரிக்காவில் உள்ள சிம்பாப்வே நாட்டின் அதிபராக ராபர்ட் முகாபே (93) அதிபராக பதவி வகித்தார். கடந்த 37 ஆண்டுகளாக இவர் அதிபராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் சிம்பாப்வேயில் திடீரென இராணுவ புரட்சி ஏற்பட்டது.

தலைநகர் ஹராரேயில் களம் இறங்கிய இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதாக அறிவித்தது. அதிபர் ராபர்ட் முகாபே கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே முகா பேவுக்கும் இராணுவத்துக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் மூத்த கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள் அண்டை நாடான தென் ஆப்பிரிக்காவின் தூதர்கள் ஈடுபட்டனர்.

இதன்போது இராணுவம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மோர்கன் டஸ்வாங்கிரையும் முகாபே தனது அதிபர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால் அவர் பதவி விலக மறுத்து விட்டதை தொடர்ந்து தற்போது முகாபேயுடன் தென் ஆப்பிரிக்க வளர்ச்சி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என அதன் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முகாபே பதவி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அடுத்த அதிபராகும் வாய்ப்பு எம்மர்சன் நங்காக் வாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கொரோனா வைரஸ் – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

wpengine

ஜப்பானின் புதிய பிரதமராகிறார் ஃபுமியோ கிஷிடா

wpengine

ஜப்பான் ஆளுங்கட்சி தலைவராக ஷின்சோ அபே மீண்டும் தேர்வு…

wpengine