கேளிக்கை

சினிமாவில் களமிறங்கும் கிரிக்கெட் வீரர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய அணியின் இரண்டு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விக்ரம் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கவுள்ளார். இந்நிலையில் ஹர்பஜன் சிங் சந்தனாம் நடிப்பில் உருவாகி வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறுகையில், ‘நான் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், சினிமா, எனக்கு நிச்சயமாக புதிய உலகம். ஏராளமான பார்வையாளர்கள் முன்பு நான் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அதனால் எனக்குப் பதற்றம் ஏதும் இல்லை. அந்த உணர்வோடு எந்தப் பதற்றத்தையும் ஒப்பிட முடியாது. என கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிப்பதாக ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது. சந்தனாம் நடிப்பில் உருவாகி வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தன்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் ‘டிக்கிலோனா’ படக்குழுவுக்கு அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.

Related posts

பிரபல நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா

wpengine

பட அதிபர்கள் போராட்டம் – புதிய படங்கள் வெளியாகாது…

wpengine

சன்னிக்கு Madam Tussauds மியூசியத்தில் மெழுகுச் சிலை…

wpengine