கேளிக்கை

சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை…



கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் மூலம் நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியிருக்கிறார்.

கார்த்திக், அவருடைய மகன் கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். வரலெட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன், சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

இதில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. இதில் மிஸ்டர்.சந்திரமௌலி என்ற பாடலை நடிகர் சிவக்குமாரின் மகளும், சூர்யாவின் தங்கையுமான பிருந்தா சிவக்குமார் பாடியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக், கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடித்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் டிரைலரை நடிகர் மாதவன் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார். படம் விரைவில் வெளியாக உள்ளது.

Related posts

உலகின் முதல்தர FACEBOOK, GOOGLE மற்றும் APPLE நிறுவனங்களில் பணியாற்றும் சேவையாளர்களுக்கு விரும்பிய விதத்தில் உணவு வகை…

wpengine

தேசிய விருது: சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ்; சிறந்த தமிழ்ப்படம் – பாரம்! முழு விபரம் (video)

wpengine

‘நான் பாட்டி ஆகிவிட்டேன் – மகிழ்ச்சியில் ராய் லட்சுமி… (photos)

wpengine