உள்நாட்டு செய்திகள்

சிசிலியாவின் வைத்தியசாலை மாற்றத்திற்கான விளக்கத்தை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு



நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சிசிலியா கொத்தலாவல தேசிய வைத்தியசாலையிலிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதற்கான காரணத்தை தனக்கு சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தனியார் வைத்தியசாலையொன்றில் சேர்க்கப்பட்டிருந்த சிசிலியா கொத்தலாவலவை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு கொழும்பு கோட்டை நீதவான் கடந்த 9ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவின் கீழ் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர். 24 மணித்தியாலங்களில் அங்கிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இது நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் செயல் என சிசிலியாவின் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியதையடுத்து சிசிலியா அவ்வாறு மாற்றப்பட்டதற்கான காரணத்தை தனக்கு சமர்ப்பிக்குமாறு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…

wpengine

சிறைக் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம்

News Editor

உள்ளுராட்சித் தேர்தல் முறைமை பரிசீலனைக்கு குழு

wpengine