கேளிக்கை

சிக்கல்களுக்கு மத்தியில் விஷால் – அனிஷா திருமண ஏற்பாடுகள்..



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்துள்ளார்.

மணப்பெண்ணின் பெயர், அனிஷா. ஆந்திராவை சேர்ந்தவர். விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இதற்காக விஷால், குடும்பத்தினருடன் ஐதராபாத் செல்கிறார். நிச்சயதார்த்தத்தில் திருமண திகதியை முடிவு செய்கிறார்கள்.

விஷாலுக்கு மணமகள் முடிவானதையும், ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடப்பதையும் அவரது தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி பிரத்தியேகமாக தெரிவித்தார்.

அண்மையில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் பூட்டை உடைக்க முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு நடிகர் விஷால் கைது செய்யபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜெயலலிதா வேடத்துக்கு நான் தான் பொருத்தம்

wpengine

‘மாஸ்டர்’ ட்ரெய்லர் வெளியீட்டு திகதி

wpengine

அமெரிக்க காதலரை கரம் பிடித்தார் ரிச்சா

wpengine