ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சிக்கலில் மாட்டிய ‘வாலு’ படம்



சிம்பு நடித்துள்ள ‘வாலு’ இதோ அதோ என்று போக்குக் காட்டிக் கொண்டிருக்கிற நிலையில் சின்னதாய் சிக்கலொன்று.

இந்தப் படத்துக்கு இசை எஸ்.எஸ்.தமன்.
வாலு படத்தில், ”யூ ஆர் மை டார்லிங்” என்ற பாடலை தமனும், சிம்புவும் இணைந்து பாடினர். இந்தப் பாடலின் டியூனை தான் இசையமைக்கும் தெலுங்குப் படம் ஒன்றிலும் பயன்படுத்தினார் தமன். வாலு முதலில் வரும் என்ற எண்ணத்தில் இதனை அவர் செய்தார்.

ஆனால், வாலு படத்தை முந்திக் கொண்டு அந்த தெலுங்குப் படம் நேற்று வெளியாகியுள்ளது.

ரசிகர்களைப் பொறுத்தவரை தெலுங்குப் படத்தில் வந்த டியூனை வாலு படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் நினைப்பார்கள்.

படம் தாமதமானாலும் நினைக்காத திசையிலிருந்தும் சோதனைகள் வரத்தானே செய்யும்.

Related posts

மஹிந்தவை தண்டிப்பது இப்படியல்ல

wpengine

Gmail மற்றும் Google drive செயற்பாட்டில் தடங்கள்…

wpengine

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற அனர்த்தம் – நன்கொடையாளர்களுக்கு வங்கிக் கணக்கு அறிமுகம்…

wpengine