உள்நாட்டு செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் இராணுவத்தினரிடம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் பணிகள் இன்று முதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தீர்மானத்துக்கு அமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன் முதற்கட்டத்தின் கீழ் முதலாவது சாரதி அனுமதி பத்திர விநியோக பணிகள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தலைமையில் இடம்பெறவுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 01 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் பரிந்துரைப்பின் பேரில், தற்போது ஒரு தனியார் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் பணியை இராணுவத்திற்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

Related posts

மேலும் 13 பேர் பூரண குணம்

wpengine

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

wpengine

விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

wpengine