உள்நாட்டு செய்திகள்

சாரதிகளுக்கு இன்று(18) முதல் விசேட பரிசு வழங்கும் திட்டம்…



கொழும்பு நகருக்குள் சட்டத்தை மதித்து வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு இன்று(18) முதல் விசேட பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை மேற்கொள்ள போக்குவரத்துப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

குறித்த இந்த நடவடிக்கையை கொழும்பு நகருக்குள் முன்னெடுக்கவுள்ளதாகவும், சிவில் உடையில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் இதற்கான கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கண்டறியப்படும் சிறந்த சாரதிகளுக்கு அடையாள ஸ்டிகர் ஒன்று ஒட்டப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

விபத்துக்களைக் குறைப்பது மேற்குறித்த இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த செயற்திட்டத்தின் முதலாவது கட்ட நடவடிக்கை கண்டியில் முன்னெடுக்கப்பட்டதாகவும் இது வெற்றியளித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

(rizmira)

Related posts

சட்டவிதிமுறைகளை மீறிய 71பேர் கைது

wpengine

போர்க்குற்றச்சாட்டு பட்டியலில் மஹிந்த, கோத்தா பெயர்கள்

wpengine

சமூகங்கள் மீதான தாக்குதல்கள் மிகவும் கவலையளிக்கிறது…

wpengine