ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சாமுவேல்ஸ் ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலை தப்பியது



3 நாடுகள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 5-வது ‘லீக்’ ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.

முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்தது. தொடக்க வீரர் உஸ்மான் குவாஜா 98 ரன்னும், கேப்டன் சுமித் 74 ரன்னும் எடுத்தனர். ஹோல்டர், பிராத்வெயிட், போல்லார்ட் தலா 2 விக்கெட் எடுத்தார்.

பின்னர் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 45.4 ஓவர் களில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன் எடுத்தது. சாமுவேல்ஸ் 87 பந்தில் 92 ரன் (8 பவுண்டரி, 4 கிக்சர்) எடுத்து வெற்றிக்கு காரணமாக விளங்கினார். வெஸ்ட்இண்டீஸ் பெற்ற 2-வது வெற்றியாகும். ஆஸ்திரேலியா 2-வது தோல்வியை தழுவியது. நாளை நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் – தென்ஆப்பிரிக்கா மோதுகின்றன.

Related posts

கோடிக்கணக்கான ரூபா கொள்ளையிட்டது நிரூபிக்கப்பட்டால் உயிரிழப்பேன் – பந்துல

wpengine

இலங்கை கிரிக்கெட் அதிகாரியினால் டுபாய், விளையாட்டு மேம்பாட்டு துறை பெண்ணொருவருக்கு பாலியல் சேட்டை..

wpengine

விக்கி – சங்கரி கூட்டணியாக.. – இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கையாள வேண்டும்..

wpengine