Uncategorized

சாதாரண மடிக்கணனியை டச் ஸ்கிரீனாக மாற்றும் புதிய கருவி விரைவில் விற்பனைக்கு



சாதாரண மடிக்கணனிகள் மீதான மக்களின் ஆர்வம் தற்போது மெதுவாக குறைந்து வருகிறது இலகுவாக பயன்படுத்த வசதியாக டச் ஸ்கிரீன் (touchscreen) மடிக்கணனிகளையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

ஆனால், இதற்காக ஏற்கனவே இருக்கும் பழைய மடிக்கணனிகளுக்கு பதிலாக புதிதாக டச் ஸ்கிரீன் மடிக்கணனிகளை வாங்க வேண்டிய நிலை இனி இருக்காது.

சுவீடன் நாட்டை சேர்ந்த நியோநோடு (Neonode) என்ற நிறுவனம் புதிய கருவி ஒன்றை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. AirBar என்ற இந்த யூ.எஸ்.பி. கருவியை பென்டிரைவ் போல மடிக்கணனியில் பொருத்தினால் சாதாரண லேப்டாப் ஸ்கிரீன் டச் ஸ்கிரீனாக மாறிவிடும்.

கண்ணுக்கு புலப்படாத ஒளிக்கதிர்களை ஸ்கிரீனின் மேற்பரப்பில் செலுத்தும் அந்த கருவி டச் வசதியை தருகிறது. இந்த கருவி மூலமாக போட்டோவை என்லார்ஜ் செய்யலாம், விண்டோவை நகர்த்தலாம், லிங்கை கிளிக் செய்யலாம், கைவிரலால் படத்தை கூட வரையலாம். கைவிரல்கள் மட்டுமில்லாது எந்த பொருளைக் கொண்டும் ஸ்கிரீனை தொட்டால் அது டச் ஸ்கிரீனாக இயங்கும்.

இதற்காக எந்த software ஐயும் இன்ஸ்டால் ( install ) செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த கருவியின் ஒருபகுதியை யூ.எஸ்.பி. போர்ட்டிலும், மற்றொரு பகுதியை மடிக்கணனி ஸ்கிரீனின் அடிப்பகுதியிலும் பொருத்தினால் போதும்.

முதற்கட்டமாக, 15.6 இன்ச் ஸ்கிரீன் லேப்டாப்புகளில் பயன்படுத்தக் கூடிய வகையில் மட்டுமே இந்த கருவி வெளிவருகிறது.

விண்டோஸ் மற்றும் குரோம் ஓ.எஸ்.களில் இயங்கும் கணனிகளுக்கு பொருத்தமாக இது இயங்கும். ஆனால், மேக் ஓ.எஸ்-க்கு இன்னும் வெளிவரவில்லை.

வரும் 2016 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த ‘ஏர் பார்’ கருவியின் அறிமுக விலை 49 அமெரிக்க டொலராகும்

Related posts

லிட்ரோ நிறுவனத்தின் விஷேட அறிவிப்பு

News Editor

விந்தணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய இனவிருத்தி உறுப்பு கண்டுபிடிப்பு

wpengine

இதுவரை 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன

wpengine