உள்நாட்டு செய்திகள்

சாதாரணதரப் பரீட்சை முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவர்களின் பெறுபேறுகளை தடை…


கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் போது முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவர்களின் பெறுபேறுகளை தடை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சையின் போது முறைகேடுகள் இடம்பெற்ற 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பில் விசாரணை செய்வதற்கு சிறப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறு குற்றங்கள் தொடர்பிலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை பரீட்சை மோசடிகளில் ஐவர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 28 பேர் கைது

wpengine

28 கொள்கலன்கள் மீளவும் உக்ரைனுக்கு அனுப்ப நடவடிக்கை

wpengine

UNP பா.உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று

wpengine