விளையாட்டு

சாகிப் அல் ஹசன் தலைமையில் மீண்டும் T-20 தொடரில் களமிறங்குகிறது பங்களாதேஷ் அணி…



ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரில் விளையாடும் பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் T-20 கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி இந்தியாவில் உள்ள டேராடூனில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கு பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு வருடத்திற்குப்பின் துடுப்பாட்ட வீரர் மொசாடெக் ஹொசைன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இம்ருல் கெய்ஸ், தஸ்கின் அஹமது, விக்கெட் கீப்பர் நுருல் ஹசன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் 3, 4 மற்றும் 7-ந் திகதிகள் நடக்கும் குறித்த இந்த தொடருக்கான பங்களாதேஷ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

சாகிப் அல் ஹசன், மெஹ்முதுல்லா, தமிம் இக்பால், சவுமியா சர்கார், லித்தோன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம், சபிர் ரஹ்மான், மொசாடெக் ஹொசைன், அரிபுல் ஹக்யூ. மெஹிது ஹசன் மிராஸ், நஸ்முல் இஸ்லாம், முஸ்டாபிஜூர் ரஹ்மான், அபு ஹைடர், ருபெல் ஹொசைன், அபு ஜாயத்.

Related posts

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கைக்கு

wpengine

உலக கிண்ண தொடரில் பாகிஸ்தான் உடனான போட்டிகளில் இந்திய அணி விளையாட மாட்டாது…

wpengine

2017 IPL ‘Delhi Daredevils’ அணிக்காக ஏஞ்சலோ மேத்யூஸ் அதிஉச்ச ஏலத்தில்…

wpengine