உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

சவூதி – இஸ்ரேல் இடையிலான மோதலுக்கான காரணத்தினை இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தெரிவிப்பு…



சவூதி அரேபியாவுக்கும் இஸ்ரவேலுக்கும் ஒரு பொது எதிரி காணப்படுவதாகவும், பலஸ்தீன் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள கருத்து முரண்பாடே அந்த எதிரியாகும் எனவும் சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ‘தி டைம்ஸ்’ சஞ்சிகைக்கு அவர் வழங்கிய செவ்வியொன்றுக்கே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சவூதிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்பொழுது சிறந்த நல்லுறவு நிலவி வருகின்றது. இதனால், சவூதிக்கும் புதிய சீர்திருத்தமொன்றை அறிமுகம் செய்ய செயற்படவுள்ளதாகவும் இளவரசர் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன் நெருக்கடி தொடர்பில் இஸ்ரவேலுக்கும் சவூதிக்கும் இடையில் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கும், இராஜதந்திர நடவடிக்கைளுக்கும் இந்த கருத்து வேறுபாடு பெரும் தடையாகவுள்ளது.

பலஸ்தீன் தொடர்பில் காணப்படும் நெருக்கடி நிலைமையை விரைவாக தீர்த்துக் கொள்ள தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் இளவரசர் சல்மான் மேலும் அச்சஞ்சிகைக்குக் குறிப்பிட்டுள்ளார்.

 

####

Related posts

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் பாலிதவின் யோசனைக்கு ரவி எதிர்ப்பு..!

wpengine

சமகால அரசியலில் குளிர்காய நினைக்கும் அனுரவினை காட்டிக்கொடுக்குமா தாஜுதீன் CCTV பதிவுகள்..

wpengine

ஒரு மாத காலத்திற்கு பேஸ்புக் சேவைக்கு தடை…

wpengine