உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சற்று முன்னர் ரணில் பதவிப் பிரமாணம்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை, ரணில் விக்கிமரசிங்க 6 ஆவது முறையாகவும் பிரதமராகப் பதவிப் பதவியேற்றுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. இந் நிலையில் கடந்த திங்கட் கிழமை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்த நிலையில், பிரதமர் பதவிக்கு நியமிக்க பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றி புதிய பிரதமரையும், அதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை ஒன்றையும் நியமிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் தற்போது புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

விமல் வீரவன்சவின் கருத்தை முற்றாக மறுக்கிறார் அமெரிக்க தூதுவர்

News Editor

ஊடகவியலாளர்கள் தாக்குதல் தொடர்பாக ஐ.நாவில் பதிலளிக்க இலங்கை தயாராக வேண்டும் – ருவான் விஜேவர்தன

wpengine

சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேருக்கு காயம்

wpengine