Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சர்வ கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வி?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சர்வ கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

பாராளுமன்றத்தில் உள்ள பல கட்சிகள், கட்சிகளாக அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள விரும்பாத காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது..

இதன் காரணமாக சர்வ கட்சி அரசாங்கத்துக்குப் பதிலாக சர்வ கட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும், அரசாங்கத்துடன் இணைந்தவுடன், அரசியல் கட்சிகளாக இல்லாவிட்டாலும், கட்சிகளிலிருந்து தனித்தனியாக வந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.

அமைச்சர்கள் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளதாகவும் தெரியவருகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Related posts

லொத்தர் சீட்டுகளின் விலை இன்று முதல் இரட்டிப்பு விலையில்..!

wpengine

விஷேட தேவையுடைய இராணுவத்தினரின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

wpengine

IPL 2016 முதன் முறையாய் கிண்ணத்தை சுவீகரித்தது ஐதராபாத் அணி

wpengine