உள்நாட்டு செய்திகள்

சர்வதேஷ இன்டர்போலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்



சர்வதேச பொலிஸான இன்டர்போலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில், இலங்கை கைச்சாத்திடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்டர்போலுடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் கைச்சாத்திடவுள்ளார்.

உகண்டாவில் நடைபெற்றுவரும் சர்வதேச பொலிஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள பொலிஸ்மா அதிபர், அங்கு வைத்து இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடவுள்ளார்.

மேலும் உகண்டாவில் நடைபெற்றுகொண்டிருக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, பொலிஸ்மா அதிபர் நாட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.

அதனையடுத்து, பதில் பொலிஸ்மா அதிபராக மேல்மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர் 5ஆம் திகதிவரையில் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அர்ஜுன ஐ.தே.கட்சி சார்பில் அதிக விருப்பு வாக்குகளால் வெற்றி பெறுவார் – பிரசன்ன

wpengine

கொழும்பில் மாட்டிறைச்சிக்கு தட்டுப்பாடு!

Azeem Kilabdeen

உடைமைகளை ஒப்படைக்குமாறு அறிவிப்பு

wpengine