உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையால் அரச நிறுவனங்களின் மூலதனச் செலவுகள் ரத்து



சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமைய 30 அரச நிறுவனங்களின் மூலதன செலவுகள் ரத்துச் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடம் 1.2 மில்லியன் டொலர்களை கடனாக கோரியுள்ளது. ஆனால் இந்த கடனை வழங்குவதற்காக நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ளது.

உள்நாட்டு தேசிய உற்பத்தியை 5.4 வீதமாக குறைக்க வேண்டும் என்பது இந்த நிபந்தனைகளில் ஒன்று. இதற்காக 30 அரச நிறுவனங்களின் மூலதன செலவுகளை ரத்துச் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

வரி அறவீடுகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் நாணய நிதியம் விதித்துள்ளது.

இதன் காரணமாக பல அரச நிறுவனங்கள் எதிர்காலத்தில் பெரும் நெருக்கடிகளை சந்திக்கும் எனவும் கூறப்படுகிறது.

மின்சார சபை, ஸ்ரீலங்கன் விமான சேவை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை போக்குவரத்துச் சபை, சில அரச வங்கிகள் தனியார் மயப்படுத்தப்பட உள்ளதுடன், கல்வி, சுகாதாரம் உட்பட அத்தியாவசிய சேவைகளின் செலவுகளை குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

Related posts

பூஜித் – ஹேமசிறி தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக நிஷாந்த ரணதுங்கவும் வேட்புமனு தாக்கல்

wpengine

பந்துல குணவர்தனவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு

wpengine