உள்நாட்டு செய்திகள்

சர்வதேச கலப்பு பொறிமுறைக்கு அழுத்தம் – சர்வதேச மன்னிப்பு சபை.


போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளுக்காக சர்வதேச கலப்பு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என மீளவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை  தெரிவித்துள்ளது.

உண்மை, நீதி, நட்டயீடு மற்றும் மீளிடம் பெறாமையை உறுதி செய்தல் ஆகிய நான்கு முக்கிய பொறிமுறைகளும் உருவாக்கப்பட வேண்டும்.

உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த சர்வதேச கலப்பு பொறிமுறையாக அவை அமைய வேண்டும் என்று அதன் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விடயங்களில் காலதாமதம் ஏற்படக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் அவசியம் இல்லை என்றும், இதனை சர்வதேச நாடுகள் புரிந்துக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு..

wpengine

நாளை(02) கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு…

wpengine

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்; 186 ஆக உயர்வு

wpengine