உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

Update – சர்ச்சைக்குரிய பிணைமுறி குறித்த விசேட அறிவிப்பு இன்று மாலை..



சர்ச்சைக்குரிய பிணைமுறி குறித்த விசேட அறிவிப்பு இன்று(03) மாலை 6.00 மணிக்கு தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது..

——————Update 2018-01-03 13:00PM

இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் ஊடகங்களுக்கு விசேட அறிவித்தலொன்று இன்று(03) விடுக்கப்படவுள்ளது.

குறித்த இந்த அறிக்கை கடந்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இது தொடர்பில் எடுக்கப்பட இருக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜனாதிபதி இன்று(03) ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுக்க இருப்பதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று(02) தெரிவித்தார்.

 

#reeshma

Related posts

இரண்டாவது நாளாகவும் ‘ஒன்லைன்’ இல்லை

wpengine

இன்று காலை 9 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில்…

wpengine

தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்..!

wpengine