உள்நாட்டு செய்திகள்

சர்ச்சைக்குரிய சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியையே அரசுடைமையாக்க வேண்டும் – GMOA..



அரசு அரசுடைமையாக்க வேண்டியது நெவில் பிரணாந்து வைத்தியசாலையை அல்ல எனவும், சர்ச்சைக்குரிய சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியையே என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

அரசாங்கம் சைட்டம் பிரச்சினைக்குத் தீர்வாக நெவில் பிரணாந்து வைத்தியசாலையை அரசுடைமையாக்க நேற்று(27) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளது.

இது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமந்த ஆனந்த கருத்துத் தெரிவிக்கையில்;

நெவில் பிரணாந்து வைத்தியசாலையை அரசுக்கு எடுத்துக் கொள்வதனால், அரசாங்கத்துக்கு மேலும் சுமை அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், சங்கத்தின் மத்திய செயற்குழு விரைவில் மீண்டும் கூடவுள்ளதாகவும், அதன் போது எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதா? இல்லையா? என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாவும் அவர் குறிப்பிடிருந்தார்.

(rizmira)

Related posts

பதவி கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னால் செல்ல மாட்டேன் – சரத் பொன்சேகா..

wpengine

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு

wpengine

அர்ஜூன் மஹேந்திரனை கைது செய்ய தேவையான ஆவணங்களை CIDக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு…

wpengine