கேளிக்கை

சர்கார் படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்…



விஜய்யின் படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், சர்கார் படக்குழுவில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்திருப்பதும் உறுதியாகி உள்ளது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்யின் 62-வது படத்திற்கு சர்கார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்திருப்பது உறுதியாகி உள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் நிலையில், பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார்.

மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் உள்ளிட்ட அனைத்து பாடல்களின் வரிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சர்கார் படத்திலும் விவேக் ஒப்பந்தமாகி இருப்பது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

போஸ்டர் ரிலீசுக்கு பிறகு விவேக்கும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து விவேக் கூறியிருப்பதாவது,

`தளபதி விஜய்க்காக இசை மேதாவி ஏ.ஆர்.ரஹ்மானுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. மீண்டும் இவர்கள் இரண்டு பேருடன் இணைவது பெருமிதம். பொதுநலத்தை மனதில் வைத்து படம் எடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுடன் இணைய வேண்டுமென்ற கனவும் நிறைவேறிவிட்டது. சர்கார் படக்குழுவுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related posts

சர்ச்சையில் ‘Dangerous’

wpengine

சின்னத்திரையில் நயன்தாரா?

wpengine

இடிந்து விழுந்த 7 மாடிக் கட்டிடத்தின் தற்போதைய நிலை.. [PHOTOS]..

wpengine