உள்நாட்டு செய்திகள்

சரத் பொன்சேகா கொழும்பிலும் அனோமா கம்பஹாவிலும் போட்டி



ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா, ஜனநாயகக் கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த மானவடு கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் ஊழல் மற்றும் மோசடியாளர்களுக்கு வேட்புரிமை வழங்கியுள்ளதால், ஜனநாயகக் கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

UPADTE – கடும் வாகன நெரிசல், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் வேண்டுகோள்..

wpengine

கல்வி, சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தற்காலிகத் தடை

wpengine

வெளிவிவகார அமைச்சர் – மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

wpengine