உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சரத் பொன்சேகா இன்று(25) சீ.ஐ.டி. முன்னிலையில்…


வனஜீவராசிகள் அமைச்சரான சரத் பொன்சேகா இன்று(25) குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள மேலதிக விசாரணைகளில் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்ளவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அமைச்சர் சரத் பொன்சேகா இன்று(25) மதியம் 12 மணிக்கு குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் கொள்ளை தொடர்பிலான புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுத்துள்ளதாக குறித்த திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சசிகலாவின் கணவர் நடராசன் உலகை விட்டும் பிரிந்தார்…

wpengine

இந்தியாவில் இலங்கை ஜனாதிபதியின் பெயரில் வீதி மற்றும் பூங்கா

wpengine

ராஜாங்க அமைச்சர்களின் துறைகள் வர்த்தமானி ஊடாக அறிவிக்க உத்தேசம்

wpengine