உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சரத் பொன்சேகாவை இராணுவ பதவியில் அமர்த்துவது குறித்து திட்டமில்லை – பிரதமர்..



முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை இராணுவத்திற்கு பொறுப்பாக மீண்டும் கடமையில் அமர்த்துவது குறித்து திட்டமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இராணுவத்திற்கு பொறுப்பாக சரத் பொன்சேகாவை நியமிக்க அமைச்சரவை தீர்மானிக்கவில்லை என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது தெரிவித்துள்ளார்.

நாட்டில் விசேட இராணுவப் பிரிவுகளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த வாரம் அமைச்சரவையில் குப்பை பிரச்சினை பற்றி பேசப்பட்டதாகவும், சரத் பொன்சேகா பற்றி பேசவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவிற்கு இராணுவத்தின் பொறுப்பினை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அண்மையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டிருந்தார். எனினும் இவ்வாறு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

துமிந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – விதுர விக்ரமநாயக்க

wpengine

“மக்கள் பேரணி கொழும்புக்கு” இன்று(05) மாலை…

wpengine

இன்றும் மழை

wpengine