உள்நாட்டு செய்திகள்

சரத் குமார உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 24ம் திகதி விசாரணைக்கு…



முன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அவர்களை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.

ஒரு சந்தேக நபருக்கு 25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாவான சரீரப்பிணை என்ற அடிப்படையில் 06 சந்தேகநபர்களும் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 24ம் திகதி மீண்டும் விசாரிக்கப்பட உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 10 இலட்சத்து 90,000 ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தி நாட்குறிப்பு புத்தகங்கள் அச்சிட்டு விநியோகித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தையிட்டி மக்களின் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி. ஆதரவு

Azeem Kilabdeen

யோஷிதவுக்கு இரு வாரங்கள் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி..

wpengine

கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்கிறது

wpengine