உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சம்பள ஆணைக்குழு இன்று(03) கூடுகிறது…


அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பில் ஆராயும் விசேட சம்பள ஆணைக்குழு, கொழும்பு மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை நிர்வாக நிறுவன கட்டிடத்தில் அவர்களது அரச கடமைகளை இன்று(03) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அனைத்து அரசாங்க ஊழியர்கள் மற்றும் புகையிரத சேவை உள்ளிட்ட சம்பள முரண்பாடுகள் காணப்படும் சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து, இரு மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை வழங்கும் வகையில் குறித்த ஆணைக்குழு, இம்மாத இறுதியில் முதல் கட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளது.

ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி முதல் இரண்டு மாதங்களுக்கு என வர்த்தமானி அறிவித்தளூடாக நியமிக்கப்பட்ட 15 பேர் கொண்ட ஆணைக்குழுவின் தலைவராக எஸ்.ரனுன்கே, செயலாளர் எச்.ஜீ.சுமனசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

முன்னாள் ஜனாதிபதியிற்கு சீ.ஐ.டி அழைப்பு…

wpengine

நவீத், அன்வர், கதீர் அஹமட் அணியிலிருந்து நீக்கம்

wpengine

பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை – நிறுவனம் சுற்றிவளைப்பு

wpengine