ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சமையல் எரிவாயுவின் விலை ரூ.300 இனால் அதிகரிப்பு…?


12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலையினை 300 ரூபாவினை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என லாப் நிறுவன தலைவர் டப்ளியூ.கே.எச்.வேகபிடிய தெரிவித்துள்ளார்.

அதற்கான கோரிக்கையானது நுகர்வோர் அதிகார சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையானது அதிகரித்தது வருவதாலும், சமையல் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலையானது அதிகரிப்பதால் எரிவாயு தொழிலானது அதிகளவில் பாதிப்படைவதாகவும் அவர் நுகர்வோர் அதிகார சபைக்கு அனுப்பியுள்ள கோரிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

சந்திரிக்காவுக்கு வெட்டிய குழியில் தானே விழுந்த மகிந்த!!!

wpengine

தான் இறந்­து­விட்­டதை போல் நடித்து முன்னாள் காத­லியின் கொலை முயற்­சியை அம்­ப­லப்­ப­டுத்­திய இளைஞர்

wpengine

ரோஹிஞ்சா மக்களுக்காக ஆங் சான் சூகி வாய் திறப்பாரா

wpengine