கேளிக்கை

சமூக வலைதள ரசிகர்களைச் சந்திக்கும் தனுஷ்…


சமூக வலைதளங்களில் குழுக்களை ஏற்படுத்தி, உறுப்பினர்களாக இருக்கும் தன்னுடைய ரசிகர்களைச் சந்திக்க இருக்கிறார் தனுஷ்.

தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கியுள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கள் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்புக்களும் முடிந்துள்ளது.

இரண்டு படங்கள் வெளியாக தயாராகி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் தனக்காகக் குழுக்களை உருவாக்கி, அதில் உறுப்பினர்களாக இருக்கும் ரசிகர்களை நேரில் சந்திக்க இருக்கிறார் தனுஷ்.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசரான வினோத், ட்விட்டரில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் இந்தச் சந்திப்பு நடைபெறும் எனவும், விரைவில் சரியான திகதி மற்றும் இடத்தை அறிவிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இவரை பார்த்தால் வாந்தி வருகிறது – பிரபல நடிகை சர்ச்சை பதிவு

wpengine

அமெரிக்காவில் 89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஆரம்பம்…

wpengine

தமிழ் திரையுலகில் கவர்ச்சி நாயகி சன்னி லியோன்..

wpengine