உள்நாட்டு செய்திகள்

சமீர சேனாரத்ன மீது துப்பாக்கிப் பிரயோகம் – சந்தேகத்தின் பேரில் மாநகர சபை உறுப்பினர் கைது…



கடந்த 2017 பெப்ரவரி மாதம் 06ம் திகதி மாலபேயிலுள்ள சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி சமீர சேனாரத்ன மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறித்து சந்தேகத்தின் பேரில் கடுவெல மாநகர சபையின், மாநகர சபை உறுப்பினர் லக்மால் விலத்கமுவ குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சமீர சேனாரத்ன தனது காரில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இனந்தெரியாதோரால் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, சந்தேகத்தின் பேரில் மாநகர சபை உறுப்பினர் லக்மால் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சமீர சேனாரத்ன மீதான துப்பாக்கிப் பிரயோகம் போலியாக திட்டமிடப்பட்டது என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணைகளை மேற்கொள்ள இரகசிய பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்திருந்த நிலையில், சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி சமீர சேனாரத்ன மீது குற்றஞ்ச்சாட்டப்பட்ட நிலையில் அவர் பதவியில் இருந்து இடைநிறுத்த சைட்டம் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

$rizmira

Related posts

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதிக்கு பூட்டு…

wpengine

இன்று மழையுடன் கூடிய காலநிலை

wpengine

பா.உறுப்பினர்களது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கவில்லை – ஆணைக்குழு மறுப்பு..

wpengine