உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சமஷ்டி பிரேரணை உடன் வாபஸ் பெறாவிடின் இரத்த வெள்ளம் பாயும் – இத்தேகந்தே தேரர் எச்சரிக்கை



வட மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட சமஷ்டி பிரேரணையை குறித்த சபை உடன் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் இந்நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் அறிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் என்ற பிரேரணையும் சிக்கலுக்குரியது எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு, கிழக்கு இணைந்த தமிழ் பிராந்தியத்துக்கு சமஷ்டி அரசியலமைப்பு முறையின் கீழ் தனியாட்சிப் பிராந்தியம் தொடர்பான பிரேரணை, வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனால் நேற்று முன்வைக்கப்பட்டது.

இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சகலரும் ஆதரவு தெரிவித்தனர். எதிர்வரும் நாட்களில் இந்தப் பிரேரணை அரசியலமைப்பு சபைக்கு ஒப்படைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இதுவரை 888 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்

wpengine

இனவாதிகளை பலப்படுத்த வீடு வீடாக வாக்கு கேட்டு அலைகின்றார்கள் – ரிஷாத்

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியணின் ‘Go Home China’ கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..!

wpengine