உள்நாட்டு செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தில் முறைப்பாடு…


கடந்த 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஹன்சாட் அறிக்கையை, சபாநாயகர் தயாரித்தமையானது சட்டத்துக்கு விரோதமானது என தெரிவித்து அது தொடர்பில் பிவித்துரு ஹெல உருமய, கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தில் நேற்று(27) மாலை முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உருமயவின் பிரதி தலைவர் மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த கடிதத்தில், பாராளுமன்ற நடவடிக்கைகள், அரசியலமைப்பு, நிலையியல் கட்டளை மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய இடம்பெறவில்லை என தெரிவித்தும், இதனுடன் கடந்த 14, 15, 16, 19, 21 மற்றும் 23 ஆம் திகதிகளில் பாராளுமன்ற நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறாததால் குறித்த ஹன்சாட் அறிக்கையை ஏற்க முடியாது என அவைத்தலைவர் அமைச்சர் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட அரச ஆளுந் தரப்பினர் நேற்று(27) சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

SLC T-20 லீக் போட்டிகளுக்கான 04 தலைமைகள் கொண்ட அணியினர் விபரம் வெளியீடு…

wpengine

20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது

wpengine

பிள்ளையானின் பிணை கோரிய மனு மேல் நீதிமன்றால் ஒத்தி வைப்பு

wpengine