உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு…


உயர் நீதிமன்றினால் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பில் சபாநாயகர் எடுத்த தீர்மானமானது சட்டவிரோதமானது எனக் கோரி ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக சபாநாயகர், சட்டமா அதிபர் மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளரின் ​பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 27 ஆம் திகதி பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கலைக்கப்பட்டிருந்த பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் மேற்கொண்ட தீர்மானம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பாராளுமன்றம் கூட்டப்பட்டதனால் நாட்டின் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாகவும் இந்த செயற்பாட்டினால் சபாநாயகர் உட்பட பிரதிவாதிகள் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மீறியுள்ளதாகவும் தீர்ப்பு வழங்குமாறு மனுதாரர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நான்கு கிலோ தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது…

wpengine

கட்டான பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி – பாதுகாப்பாக செயலிழக்கப்பட்டது…

wpengine

65வது வருட நிறைவையொட்டி இரத்மலானையிலுள்ள விமானப் படையின் நூதனசாலை பொதுமக்கள் காட்சிக்கு

wpengine