உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சபாநாயகரால் பிரதம நீதியரசருக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் கடிதம் பொய்யானது…



சபாநாயகர் கரு ஜயசூரியவால் பிரதம நீதியரசருக்கு நேற்று(21) அனுப்பப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள கடிதம் பொய்யான ஒன்றென சபாநாயகர் அலுவலகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

புதிய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்காமைக் காரணமாக, நாட்டில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசமைப்பின் 37.2 சரத்துக்கு அமைய பிரதம நீதியரசரின் அனுமதியுடன் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்கள், முப்படைகளினதும் கட்டளைத் தளபதி பொறுப்பு தனக்கு கிடைக்க வேண்டுமெனத் தெரிவித்து பிரதம நீதியரசர் சுனில் பெரேராவுக்கு சபாநாயகரால் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சபாநாயகர் அலுவலகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

Related posts

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 15ம் திகதி இலங்கைக்கு..

wpengine

நாட்டை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர்களே – முத்தலிப் நெளஷாத்..!

wpengine

உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்..!

wpengine