கேளிக்கை

சன்னி லியோன் ஓவர் ஆட்டம் போட உதறியது இளம் தளபதியா..??


பாலிவுட்டில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் பாலிவுட்டில் நடிக்கும் படங்கள் எல்லாம் சக்கை போடு போட்டு வரும் நிலையில், தமிழுக்கு எப்போது வருவார்? என அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், விஜய் தற்போது நடித்துவரும் ‘பைரவா’ படத்தின் ஒரு பாடலுக்கு சன்னி லியோனை ஆட வைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்.

அதன்படி, அவரை ஒப்பந்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்தனர். ஆனால், சன்னி லியோன் போட்ட கண்டிஷன்கள் எல்லாம் பார்த்து படக்குழுவினர் அதிர்ந்து போயுள்ளனர். அதாவது, சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வருவதென்றால், காஷ்ட்யூம் டிசைனர், மேக்கப் மேன் முதற்கொண்டு 10 பேர் எப்போதும் அவர் கூடவே வருவார்களாம்.

அவர்கள் மும்பையிலிருந்து சென்னை வருவதற்கான விமான டிக்கெட் செலவு, சென்னையில் சன்னி லியோனுக்கு இணையாக அவர்களுக்கும் பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ரூம்கள் என அனைத்து செலவையும் படக்குழுவுதான் செய்தாக வேண்டுமாம். ஒரு பாடலுக்கு இவ்வளவு பெரிய தொகையை செலவிட வேண்டுமா? என எண்ணிய படக்குழு சன்னி லியோனுக்கு விடை கொடுத்துவிட்டு வேறு நடிகையை வைத்து அந்த பாடலை படமாக்கிவிடலாம் என்று முடிவு செய்துள்ளதாம்.

சன்னி லியோன் ஏற்கெனவே தமிழில் ஜெய் நடிப்பில் வெளிவந்த ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், விஜய்யுடன் சன்னி லியோன் குத்தாட்டம் போடுவதை பார்க்க ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

Related posts

பத்திரிகையாளரை மணக்கிறார் பிரபல நடிகை…

wpengine

மீண்டும் கமலோடு இணைந்து வாழ முடிவா? – கௌதமி விளக்கம்

wpengine

ரம்யா கிருஷ்ணனை பொம்பள கமல்ஹாசன் என்று கூறிய இயக்குனர்…

wpengine