கேளிக்கை

சன்னிக்கு Madam Tussauds மியூசியத்தில் மெழுகுச் சிலை…



தமிழில் பாடல் காட்சிகளில் மட்டும் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் உருவாக இருக்கும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கார். இவரை இந்த படத்தின் ஹீரோயினாக தேர்ந்தெடுக்க காரணம் இவர் இந்திய முழுவதும் தெரிந்த முகம் என்பதால்.

இந்திய பிரபலமாக இவர் இருப்பதால் தான் ஒரே கதாநாயகியை வைத்து நான்கு மொழிகளிலும் படம் தயாரிக்க முடிகிறது என்று கூறினார் இயக்குனர். இப்படத்திற்காக இவருக்கு நம்பர் 1 நடிகை நயன்தாராவிற்கு சமமான சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். தற்போது இவரின் மெழுகு சிலையை மேடம் டுசாட் மியூசியமில் நிறுவ போகிறார்கள்.

இந்த மியூசியம் பொறுத்த வரை உலகம் முழுவதும் பிரபலங்களின் தத்ரூப சிலையை வைத்திருப்பார்கள். அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், சச்சின் என பல பிரபலங்களின் அங்கு இருக்கிறது, அந்த வரிசையில் தற்போது சன்னி லியோனின் சிலையும் வைக்கவிருக்கிறார்கள். இந்த மியூசியம் டெல்லியில் உள்ளது. இதற்காக இவரின் உடலை அளவெடுத்துள்ளதாக அவரே கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Related posts

முதல் படத்திலேயே பிரபல நடிகையுடன் நடிக்கும் செல்வராகவன்

wpengine

இராஜ் அவசரமாக ஞானசார தேரரை சந்திக்க சென்றது ஏன்..? உண்மை வெளிச்சத்திற்கு..

wpengine

இந்தியாவின் முன்னணியில் உள்ள 100 நட்சத்திரங்களின் பட்டியலில் தந்தையினை முந்திய ஸ்ருதிஹாசன்

wpengine