உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சனல்-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய கருத்தை நான் மறுக்கிறேன் – பிரதமர்



போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீடுகளை நிராகரிக்க முடியாது என்று சனல்-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தான் கூறவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

சர்வதேச போர்க்குற்ற விசாரணையை அரசாங்கம் அனுமதிக்காது. நாம் ரோம் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை என்றும், உள்நாட்டு நீதிபதிகளே விசாரணைகளை மேற்கொள்வர் என்றும் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கூறியிருந்தார்.

இந்த விடயத்தில் நானும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அரசாங்கத்தில் உள்ள ஏனையவர்களும் ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கிறோம்.

அதேவேளை விசாரணைகளுக்கு டெஸ்மன்ட் டி சில்வா போன்ற நிபுணர்களின் உதவி கோரப்படும்.

இதுபற்றி புதன்கிழமை நானும் ஜனாதிபதியும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் கலந்துரையாடியுள்ளோம் என்றும் அவர் நேற்று தெரிவித்தார்.

Related posts

ராஜபக்ஷ நிதியத்தின் இருவர் FCID இனால் கைது

wpengine

மஞ்சுளா பெரேரா கைது

wpengine

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த போதைப்பொருள்..!

wpengine