Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சனத் , மிலான் அலைபேசிகளை வழங்கும் வரை தடுப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தமது அலைபேசிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்கும் வரை பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத் ஆகியோரை தடுத்து வகை்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, இன்று (24) கட்டளையிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அலரிமாளிகை மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கமவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேகநபர்களின் அலைபேசிகளை சீ.ஐ.டியிடம் ஒப்படைத்ததன் பின்னர் அவர்களை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேக நபர்களை எச்சரித்த நீதவான், நீதிமன்ற உத்தரவை மீறினால் பிணை ரத்து செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

Related posts

காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு …

wpengine

ஊரடங்கு உத்தரவை மீறிய 302 பேர் கைது

wpengine

எதிர்வரும் பாடசாலை விடுமுறை குறித்து விசேட அறிவித்தல்…

wpengine