ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சந்திரமுகி 2ஆம் பாகம் விரைவில்…



ரஜினியை வைத்து பி.வாசு இயக்கிய ‘சந்திரமுகி’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது பி.வாசு கன்னடத்தில் இயக்கும் படங்கள் வெற்றிப்படங்களாகி வருகின்றன.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ‘திரிஷ்யம்’ படத்தை கன்னடத்தில் பி.வாசு. இயக்கினார். இந்த படத்தில் ரவிச்சந்திரன், நவ்யாநாயர் நடித்தனர். சிவராஜ்குமார், வேதிகா நடித்த ‘சிவலிங்கா’ கன்னட படத்தையும் இவர் இயக்கினார். இந்த கன்னட படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் பி.வாசுவுக்கு கன்னட வெற்றிப்பட இயக்குனர் என்ற பெயரை வாங்கி கொடுத்துள்ளது.

இந்த நிலையில் ‘சிவலிங்கா’ கன்னட படத்தை ‘சந்திரமுகி–2’ என்ற பெயரில் தமிழில் பி.வாசு ரீமேக் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் இதை பிரமாண்டமாக தயாரித்து இயக்க பி.வாசு திட்டமிட்டுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ், அனுஷ்கா ஆகியோரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பி.வாசுவின் மகனான சக்தி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

Related posts

ரணில் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை?

wpengine

எதிர்வரும் 3 மாதத்தில் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் இராஜினாமா…

wpengine

நடிகரின் உயிரை காப்பாற்ற ஜனாதிபதி மைத்திரியின் நடவடிக்கை!

wpengine