உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சந்திக ஹத்துருசிங்க பங்களாதேஷ் பயிற்சியாளர் பதவியிலிருந்து இராஜினாமா..?



பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க தனது பதவியினை இராஜினாமா செய்ய உள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் இணையத்தளமான bdcrictime.com செய்தி வெளியிட்டுள்ளது.

“Hathurusingha got very close to resignation! எனும் தலைப்பில் குறித்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. சம்பிக்க ராமநாயக்க பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து 2019ம் ஆண்டு தொடக்கம் பங்களாதேஷ் அணியுடன் இருப்பதாக ஹத்துருசிங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அவர் பதவி விலக உள்ளதாக குறித்த இணையத்தள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஹத்துருசிங்க பங்களாதேஷ் அணியுடனான ஒப்பந்தத்தை மீற மாட்டார் என நம்புவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் bdcrictime.com இணையத்திற்கு தெரிவித்துள்ளதாக மேலும் அறிய முடிகின்றது.

(rizmira)

Related posts

ரோஸி சேனாநாயக்கவின் மனு நிராகரிப்பு

wpengine

அஜித் பிரசன்ன உண்ணாவிரத போராட்டத்தில்

wpengine

‘எஞ்சியுள்ள வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உள்ள வழி என்ன? – ஜெனீவாவில் இணங்கியதை நிறைவேற்றவும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

wpengine