கேளிக்கை

சத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா…



நயன்தாரா போல் கதையை தேர்வு செய்து நடிக்க ஆசை என்று பிரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் கூறியிருக்கிறார்.

“பிரேமம்” மலையாள படத்தில் பிரபலம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் ‘கொடி’ படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கில் நடித்து வருகிறார். மீண்டும் தமிழில் நடிப்பது குறித்து கேட்டபோது பதில் அளித்த அவர்….

‘‘பிரேமம்’ படம் எனக்கு நல்ல அறிமுகத்தை தந்தது. ‘கொடி’ படத்துக்கு பிறகு தமிழில் சில கதைகள் வந்தன. அதில் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிப்பேன். சவாலான வேடங்கள் கிடைத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன்.

நயன்தாரா கதை தேர்வு செய்து நடிப்பது வித்தியாசமாக இருக்கும். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரைப்போல கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும். விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடிக்கும் ஆசை இருக்கிறது. தமிழ் சினிமாவில் நிறைய நல்ல படங்களில் நடிக்க வேண்டும்.

இதற்காக சென்னை வந்து கதை விவாதத்தில் பங்கேற்று வருகிறேன். விரைவில் அடுத்த தமிழ் படத்தில் நடிப்பேன்’’ என்றார்.

Related posts

அமிதாப்பச்சனின் புதிய தோற்றம் – ரசிகர்கள் வியப்பில்… (PHOTOS)

wpengine

கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும் ஜோடியாக சுற்றும் தீபிகா – ரன்வீர்சிங்…

wpengine

வில்லனுக்கு ஜோடியாகும் ஸ்ருதி…

wpengine