உள்நாட்டு செய்திகள்

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை…



கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நிதி குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று(12) ஆஜர் படுத்தப்பட்ட போதே நீதவான் அவரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

39 மில்லியன் ரூபா அரச நிதியை தவறாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று இரவு முதல் ஊரடங்கு

wpengine

கடந்தாண்டுக்கான O/L பரீட்சை இன்று ஆரம்பம்

wpengine

குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரதிகள் இல்லை

wpengine