உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சதொசவில் ஒரு கிலோ சீனி 275 ரூபாய், ஒருவரால் ஒரு கிலோக்கு மேல் வாங்க முடியாது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லங்கா சதொசவில் வெள்ளை சீனி கிலோ ஒன்றுக்கு 275 ரூபாவுக்கு (தற்போதைய கட்டுப்பாட்டு விலை) தொடர்ந்து விற்பனை செய்யவுள்ளதாக லங்கா சதொச முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி வாடிக்கையாளர் ஒருவருக்கு தலா 275 ரூபாவில் ஒரு கிலோ வெள்ளை சீனி மாத்திரமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு சீனி கிலோ ஒன்று 330 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன், வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்படும் சீனியின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சில சதொச விற்பனை நிலையங்களில் வெள்ளை சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

Related posts

கொழும்பு – டெல்லிக்கு இடையில் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

wpengine

கொழும்பிலுள்ள 60 யாசகர்கள் தனிமைப்படுத்தல் முகாமுக்கு

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

wpengine